School Kit Distribution

Empowering Education, Enabling Dreams! 🎒📚
On 27 June 2026, Tamilnadu Differently Abled Federation Charitable Trust (TNDFCT), with the generous support of Aspire Systems Pvt. Ltd., distributed 300 School Kits to students with disabilities and children of parents with disabilities.
Each School Kit, valued at ₹1,500, included a school bag, notebooks, stationery items, pencil box, geometry box, steel water bottle, pencils, and other essential learning materials to support the children’s education.
We sincerely thank the Aspire Systems Human Resources and CSR Team for joining us and personally distributing the kits, encouraging our students to pursue their education with confidence.
The event was graced by Mr. P. Simmachandran, President of TNDFCT, Mr. T. Karuppaiah, Treasurer, along with State and District office bearers of the Federation.
Our heartfelt gratitude to Aspire Systems Pvt. Ltd. for investing in the future of children and promoting inclusive education.
Together, we are building an inclusive society where every child has the opportunity to learn, grow, and succeed.
#TNDFCT #AspireSystems #CSR #InclusiveEducation #SchoolKitDistribution #EducationForAll #DisabilityInclusion #Empowerment #TamilNadu #TogetherWeCan
📚 கல்விக்கு கரம் கொடுப்போம்… கனவுகளை நனவாக்குவோம்! 🎒
27.06.2026 அன்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை (TNDFCT) சார்பில், ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) நிதி உதவியுடன் 300 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளுக்கு பள்ளி கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
₹1,500 மதிப்புள்ள ஒவ்வொரு ஸ்கூல் கிட்டிலும் பள்ளிப்பை, நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்டீல் வாட்டர் பாட்டில், பென்சில்கள் உள்ளிட்ட கல்விக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மனிதவள (HR) மற்றும் CSR குழுவினர் நேரில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை தலைவர் திரு. பி. சிம்மச்சந்திரன், பொருளாளர் திரு. டி. கருப்பையா, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த அரிய கல்வி உதவியை வழங்கிய ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என்ற நோக்குடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்.
#TNDFCT #AspireSystems #CSR #கல்விஉதவி #மாற்றுத்திறனாளிகள் #பள்ளிஉபகரணங்கள் #அனைவருக்கும்கல்வி #சமூகப்பொறுப்பு #தமிழ்நாடு







